பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இறுதிநாளான நேற்று கலைநிகழ்ச்சியுடன் போட்டிகள் நிறைவடைந்தன. நிறைவு விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழில் பாலா இயக்கத்தில் யுவன் இசையில் வெளியான ’அவன் இவன்’ படத்தில் இடம்பெற்ற ’டியா,டியா டோலே’ பாடலுக்கு பெண்கள் நடனமாடினர்.
காமன்வெல்த் 2022 மேடையில் ஒலித்த யுவன் பாடல் - avan ivan
பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் யுவன் இசையமைத்த ’அவன் இவன்’ படத்தின் பாடலுக்கு பெண்கள் நடனமாடினர்.
காமன்வெல்த் 2022 மேடையில் ஒலித்த யுவன் பாடல்
காமன்வெல்த் மேடையில் நடமாடிய பெண்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவை பாடலின் இசையமைப்பளர் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோவை, ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Nayanthara: Beyond the fairytale - நெட்பிளிக்ஸில் வெளியாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்