சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், யோகி பாபு ஆவார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் பொம்மை நாயகி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது.
யோகி பாபுவின் பொம்மை நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இத்திரைப்படம் தந்தை, மகளுக்கு இடையிலான கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, சுபத்ரா, ஹரி, ஜி.என். குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். யோகி பாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.
எளிய குடும்பத்தில் உள்ள தகப்பனுக்கும், மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதையும்தான் பொம்மை நாயகி.
யோகி பாபுவின் பொம்மை நாயகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! யோகி பாபு இந்தப் படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3-ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகி பாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இயக்குநர் வ.கௌதமனின் 'மாவீரா' படம் பூஜையுடன் தொடக்கம்