தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்!

நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் பூஜை இன்று(செப்.9) சென்னையில் நடைபெற்றது.

பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்..!
பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்..!

By

Published : Sep 9, 2022, 10:55 PM IST

தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தைப் பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை நிரூபித்துக் கொண்டு, தன் நடிப்பாற்றலினால் மக்களின் உள்ளத்தையும் தன் வசமாக்கியுள்ளார்.

தற்பொழுது அவரது நடிப்பில் கே.வி. கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத ப்ரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கே.வி. கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ’ராஜ வம்சம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர். இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினை படக்குழுவினருக்கு வெளிப்படுத்தினர்.

பூஜையுடன் தொடங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்!

இதையும் படிங்க: 'உருவத்தை வைத்து விமர்சனம் செய்வது மிகவும் தவறானது' - வேதனை தெரிவித்த தயாரிப்பாளர் ரவீந்திரன்

ABOUT THE AUTHOR

...view details