தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யோகி பாபுவின் ’பொம்மைநாயகி’ போஸ்டர் வெளியீடு! - பொம்மை நாயகி

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

யோகி பாபுவின் ’பொம்மைநாயகி’ போஸ்டர் வெளியீடு!
யோகி பாபுவின் ’பொம்மைநாயகி’ போஸ்டர் வெளியீடு!

By

Published : Jul 22, 2022, 8:20 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி. யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி ’பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்தப் படத்தில் தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக , வெகுஜன மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடிந்து , இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் வெளியாக உள்ள ் இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக யாழி பிலிம்ஸ் விக்னேஸ் சுந்தரேசன் தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: தேசிய விருதுகள் 2020: சிறந்த திரைக்கதை வசனம் - ‘மண்டேலா’

ABOUT THE AUTHOR

...view details