தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’.. டைட்டில் வெளியீடு..! - மடோன் அஸ்வின்

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை, நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோர் வெளியிட்டுள்ளார்.

Etv Bharat யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’
Etv Bharat யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’

By

Published : Jul 23, 2023, 6:20 PM IST

சென்னை:நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வானவன்’. இப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ஷக்தி ரித்விக் உள்ளிட்ட பல மல்டி ஸ்டாரர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இறுதிகட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் மாஸ்குரேட் என்னும் சீரிஸை இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்துப் பணியையும், ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பினையும் செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ஆகியோர் பல தரப்பட்ட பாடல்களுக்குப் பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளனர்.

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’

இந்த இளம் படக்குழுவினர் மதுரை மற்றும் சென்னையின் கிராமப் புறங்களைச் சுற்றி படம் பிடித்துள்ளனர், EDENFLICKS PRODUCTIONS தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது Feel Good, Fantasy மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவை என அவரது ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களால் விரும்பப்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:Kanguva First Look : கங்குவா பர்ஸ்ட் லுக்கில் மிரட்டும் சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details