தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உலகத்தமிழர்கள் 'மாமனிதன்' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து வெளியாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

உலக தமிழர்கள் ’மாமனிதன்’ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா
உலக தமிழர்கள் ’மாமனிதன்’ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா

By

Published : Jun 26, 2022, 3:09 PM IST

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து வெளியாகியுள்ள படம் 'மாமனிதன்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் யுவனும் இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'மண் சார்ந்த இயக்குநர்களில் சீனு ராமசாமி தலை சிறந்தவர். என்‌ மண் புழுதியையும் மக்களையும் சரியாக காட்டியவர். ஆனால், இப்படம் ஒரு வித்தியாசமான களம். நானும் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளேன். ஒரு சினிமாக்காரன் மற்றொரு சினிமாக்காரனுடைய படம் பார்த்து அழுகிறேன். சீனு ராமசாமி வென்றுவிட்டார்.

ஒரு கதை எளிய மக்களுக்கும் சென்று சேர வேண்டும் மற்றும் அதில் கருத்தும் இருக்க வேண்டும். அதை இயக்குநர் செய்துள்ளார். இப்படம் விஜய் சேதுபதியை மற்றொரு உயரத்திற்குக் கொண்டு சேர்க்கும். அனைவரும் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்.

உலகத் தமிழர்கள் இப்படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும். இயக்குநர் மீது எனக்குப் பொறாமையாக உள்ளது. உலகத்தமிழர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்த்து, தமிழ் சினிமாவில் தரமான படங்களை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

இயக்குநரும் இசையமைப்பாளரும் கணவன், மனைவி மாதிரி. நான் இளையராஜாவை நினைத்துதான்‌ படம் எடுப்பேன். அவர் மிகப்பெரிய இசை ஞானி. அவரது மகன் யுவன் எனது நேசத்திற்குரிய பிள்ளை. இளையராஜாவும் யுவனும் தமிழ்நாட்டின் சொத்து.

உலகத்தமிழர்கள் 'மாமனிதன்' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும் - இயக்குநர் பாரதிராஜா

நானும் இளையராஜாவும் நிறைய சண்டை போட்டுள்ளோம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் வித்தியாசமான இசையை வழங்கியவர் இளையராஜா. அவர் ஒரு இசை ஊற்று. இருவரும் இணைந்து அருமையான படத்தைக் கொடுத்துள்ளனர். சீனு ராமசாமியை எனது மகனாகப் பார்க்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க:’மாயோன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : தெலுங்கில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு முடிவு..!

ABOUT THE AUTHOR

...view details