தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

SK-விற்காக பாடிய கின்னஸ் பாடகர் - பாடகர் அப்து ரோசிக்

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த தஜிகிஸ்தானைச் சேர்ந்த கின்னஸில் இடம்பெற்ற பாடகர் ’அப்து ரோஸிக்’ அவருக்காக ஓர் பாடலும் பாடியுள்ளார்.

SK-விற்காக பாடிய கின்னஸ்ஸில் இடம்பெற்ற உலகின் மிகச் சிறிய பாடகர்
SK-விற்காக பாடிய கின்னஸ்ஸில் இடம்பெற்ற உலகின் மிகச் சிறிய பாடகர்

By

Published : Jun 10, 2022, 3:56 PM IST

Updated : Jun 10, 2022, 5:27 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரபல தஜிகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான , ’அப்து ரோஸிக்’ நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து அவருக்காக ஓர் பாடலும் பாடியுள்ளார். இவர் உலகின் மிகச்சிறிய பாடகர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

இணையத்தில் பல தாஜிக் ராப் பாடல்களைப் பாடி வருகிறார். தஜிகிஸ்தானில் சாதாரண தோட்டக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயதில் ’ரிக்கட்ஸ்’(Rickets) நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் இவரின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இருப்பினும், இவரின் திறமையைக் கண்டு கொண்ட மற்றொரு ராப் பாடகரான ’பாரோன்’ என்பவரின் உதவியால் மருத்துவ சிகிச்சைப் பெற்று பாடி வருகிறார்.

சில மாதங்கள் முன்பு நடந்து முடிந்த துபாய் எக்ஸ்போவில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சியில் இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து பாடிய ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலும் சமூகவலைதளங்களில் வைரலானது.

SK-விற்காக பாடிய கின்னஸ்ஸில் இடம்பெற்ற உலகின் மிகச் சிறிய பாடகர்

இந்நிலையில், சென்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமணத்திற்காக வருகை தந்த பாடகர் அப்து ரோஸிக் , நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து அவருக்காக ஓர் பாடலும் பாடியுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மரியாவுக்கு திருக்குறள் கற்று கொடுக்கும் பிரின்ஸ்

Last Updated : Jun 10, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details