தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்குமா ஷாருக்கானின் பதான்? - ஷெசாதா

உலக அளவில் 23 நாட்களில் 976 கோடி வசூல் செய்துள்ள பதான் திரைப்படம் விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 9:12 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பதான்’ திரைப்படம் பாகுபலி 2 திரைப்படத்தின் வசூலை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதான் திரைப்படம் வெளியாகி 23 நாட்கள் ஆன பின்பும் ரசிகர்கள் வரவேற்பால் படத்தின் வசூல் குறையவில்லை. மேலும் இன்று முதல் தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைந்துள்ளதால், படத்தின் வசூல் கணக்கு பெரிய தொகையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதான் திரைப்படம் இந்திய அளவில் 609 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் 23 நாட்களில் 976 கோடி வசூல் செய்துள்ளதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளது. மேலும் பாகுபலி படத்தின் ஒட்டுமொத்த வசூலான 1510 கோடியை விரைவில் முறியடிக்கும் என படக்குழு கூறியுள்ளது.

பதான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியா முழுவதும் படத்தின் டிக்கெட் விலையை 110 ரூபாய்க்கு குறைத்துள்ளதால் வசூல் அதிகரிக்கும் என படக்குழு எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இன்று கார்த்திக் ஆர்யன் நடிக்கும் ஷெசாதா மற்றும் ஆன்ட் மென் என இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் பதான் படத்தின் வசூலை அதிகரிக்க படக்குழு டிக்கெட் விலையை குறைத்துள்ளது என கூறப்படுகிறது

இதையும் படிங்க: அனுஷ்காவின் சிரிப்பு நோய்… என்ன சொல்கிறார் மருத்துவர்?

ABOUT THE AUTHOR

...view details