உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஆஸ்கர்ஸ் விருது வழங்கும் விழா ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்தாண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருத்துக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது
இந்திய சினிமாத்துறையில் பானு அதையா 1983இல் வெளியான காந்தி திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைபாளருக்கான ஆஸ்கார் விருது வென்றார். அதன் பிறகு 1992இல் இந்திய இயக்குனர் சத்தியஜித் ரேவுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் குழுமம் கௌரவ விருது வழங்கி சிறப்பித்தது.
அதன் பிறகு 2009ஆம் ஆண்டு ’slumdog millionaire' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பிண்ணனி இசைப் பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவில் ’ஜெய் ஹொ’ என்ற பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்காக வாக்களித்துள்ளார்.
மேலும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஆஸ்கர்ஸ் விருது வழங்கும் விழாவில் இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் அமெரிக்க நடிகை நடன இயக்குனருமான லாவ்ரன் காட்லியப் ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடுகிறார்