தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பாரா?.... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! - 15 years of sivaji

லைகா நிறுவனம் தயாரிப்பில் விரைவில் தொடங்கவுள்ள சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பாரா?.... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பாரா?.... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

By

Published : Jun 16, 2022, 10:27 AM IST

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ் கதை நாயகனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. வடிவேலு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா இந்தப்படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிப்பாரா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 15 years of Sivaji : ஏவிஎம்-மின் அடுத்த சர்ப்ரைஸ்

ABOUT THE AUTHOR

...view details