சென்னை:நட்சத்திர ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்தது. அடுத்த நாளே இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 11) திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் இங்கே வந்தது மிக்க மகிழ்ச்சி. இந்த ஹோட்டலிலேயே நயன்தாராவை முதல்முறையாக படத்தின் கதை சொல்வதற்காக சந்தித்தேன். இதே ஹோட்டலில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.