தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”ரஜினிகாந்துடன் நடிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது” … நடிகை ஸ்ரேயா சரண் - rajamouli

ரஜினிகாந்த் உடன் நடிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது, அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் தான் என நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 10:58 PM IST

சென்னை: கப்ஜா படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா சரண், இயக்குநர் சந்துரு, இணை தயாரிப்பாளர் அலங்கார பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ஸ்ரேயா சரண், ”சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. எனக்கு நல்ல அழகான நினைவுகள் சென்னையில் இருக்கிறது. கப்ஜா கதையை இயக்குனர் சொல்லும் போதே மிகவும் நன்றாக இருந்தது.

தன்னை அழகாக காட்டியதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி கூறிய ஸ்ரேயா சரண், நானும் இது போன்ற படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படம் சிவராத்திரி ஸ்பெஷலாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் தியேட்டர்களில் சென்று படத்தைப் பாருங்கள்” என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்ரேயா, ”ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு இயக்குனர் ராஜமௌலியை மிகவும் பிடிக்கும். ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு தமிழில் நடிப்பது குறித்து பேசியவர், கரோனா காலத்திற்கு பிறகு நடிப்பது குறைந்ததாகச் சொல்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு எல்லோரும் கதாநாயகி சார்ந்த படமாக நடிப்பார்கள்.

ஆனால் நீங்கள் கதாநாயகன் சார்ந்த படமாக நடிப்பது குறித்த கேள்விக்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கதை நன்றாக இருந்தால் மொழி என்பது முக்கியமல்ல. தமிழில் நீண்ட காலமாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, முன்பு போல மீண்டும் அன்பும், ஆதரவும் கொடுங்கள். தமிழில் நல்ல கதைகள் வந்தால் நடிக்க நான் ரெடி” என்றார்.

மீண்டும் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, ”ரஜினிகாந்துடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அவர் சிறந்த மனிதர். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவருடன் சேர்ந்து நடித்தது ரொம்ப நல்ல அனுபவம். மேலும் சிவாஜி படம் குறித்த அனுபவத்தை பற்றி சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் தான்” என கூறினார்.

”ரஜினிகாந்துடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது” … நடிகை ஸ்ரேயா சரண்

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் சந்துரு, ”தமிழில் கொஞ்சம் பேசுவதற்கு முயற்சி செய்கிறேன். சிவராத்திரி ஸ்பெஷலாக இந்த பாடலை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம் தான் இந்தியாவில் சிறந்தது. கன்னடத்தில் பல படங்களை பண்ணியிருந்தாலும், சவாலான படங்களை எடுத்து பண்ண வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன்.

எங்களின் கூட்டு முயற்சி தான் ’கப்ஜா’. எனக்கு இது தான் முதல் பான் இந்தியா படம். கப்ஜா திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது. இந்த கேங்ஸ்டார் படத்தில் கிச்சா சுதீப் நன்றாக நடித்துள்ளார் எனவும், கப்ஜா படமும் இரண்டு பாகங்கள் இருக்கலாம்” எனவும் கூறினார்.

இதையும் படிங்க:Vaathi: தனுஷின் 'வாத்தி' திரைப்படம் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details