நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கியவர், மித்ரன் ஜவஹர். இவர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.
தனுஷின் 44ஆவது படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.