தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

#Justice_for_Vignesh_Shivan சமூக வலைத்தளத்தில் என்னதான் நடக்குது? - அஜித்

அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக பரவிய தகவலை அடுத்து ட்விட்டரில் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன் என்னும் ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Justice for Vignesh Sivan
ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன்..! என்னங்க நடக்குது..?

By

Published : Jan 28, 2023, 10:33 PM IST

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 11ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் நல்ல வெற்றியையும் பெற்றது.

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால் நீக்கப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவருக்குப் பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தை இயக்கப் போகிறார் என்கின்றனர். மகிழ் திருமேனி தடையற தாக்க, மீகாமன் போன்ற தரமான படங்களை இயக்கியவர். இவர் அஜித்தை இயக்குகிறார் என்றால் எதிர்பார்ப்பு எகிறிவிடும். ஆனால் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ் டேக்

இந்த நிலையில் டிவிட்டரில் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன் என்று ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறாரா அல்லது டிவிட்டரில் பரவும் தகவல் உண்மை தானா என்று போகப் போகத்தான் தெரியவரும்.

இதையும் படிங்க: 3வது வாரத்திலும் ஹவுஸ்புல்; வசூல் வேட்டையில் 'வாரிசு' கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details