ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் RRR. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு... நாட்டு.. பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. குறிப்பாக ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் வேகமாக ஸ்டெப் போடும் நடனம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை பலரும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.கீரவாணி இசையமைப்பில் உருவான இப்பாடலுக்கு அண்மையில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராம் சரண், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.