மும்பை:பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது இரண்டு மகன்களுடன் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். படம் பார்த்த பிறகு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர்கள் முட்டிமோதிக் கொண்டு முயற்சித்தனர்.
தனது மகன்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கவனமாக இருந்த ரித்திக் ரோஷனுக்கு, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்தது அசெளகரியமாக இருந்தது. காரில் ஏறச் சென்றபோதும், ரசிகர் ஒருவர் அனுமதியின்றி செல்ஃபி எடுத்ததால், ஆத்திரமடைந்த ரித்திக் ரோஷன், ரசிகரைப் பார்த்து, "என்ன செய்கிறாய்?" என்று கோபத்துடன் கேட்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.