மும்பை:நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலை மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவரது மர்மமான மரணம் பல்வேறு வதந்திகளை கிளப்பியது. காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம், கர்ப்பமாக இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று பல்வேறு யூகங்களை கிளம்பிவிட்டன.
இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதன் காரணமாத மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா(20) டிசம்பர் 24ஆம் தேதி மரணமடைந்தார்.
அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற சீரியலில் துனிஷா சர்மா நாயகியாக நடித்து வந்த நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் மேக்அப் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அவரது சக நடிகரும் முன்னாள் காதலனுமான ஷீசன் முகமது கானை போலீசார் கைது செய்தனர்.