ஏ.ஆர் ரகுமானின் புல்லரிக்க வைக்கும் இசையில், தாமரையின் அற்புத வரிகளில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியான நாள் முதலே அதில் பின்னணியாக அமைந்திருந்த இந்தப் பாடல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இதனையடுத்து, முழு பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது முழுபாடலும் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ரகுமானின் காந்தக் குரலில் கேட்போரை ஆர்பரிக்கவைக்கும் பாடலில் இடம்பெற்ற ”நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு தேனத் தந்தா என்ன ஆகும்..?” போன்ற அற்புத வரிகளில் இப்பாடல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.