சென்னை:ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஈக்காட்டுத்தாங்கல் முனீஸ்வரன் கோயில் அருகில் நேற்று (செப் 9) நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது:“விஷால் எந்த முயற்சி எடுத்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். அவரை தம்பி என்று சொன்னாலும் அவர் எனக்கு இன்னொரு மகன். எஸ்.ஜே சூர்யா கலைக்கு தலை வணங்குகிறேன். இந்த இருவரின் திறமையால் படம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்.ஜே சூர்யா,“இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை மக்கள் கொடுத்துள்ளார்கள். இந்த படத்துக்கு இறை அருள் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படம் ரிலீஸ் ஆவது இன்னும் முத்தாய்ப்பாக இருக்கிறது. இன்று அய்யனார் ஆசியோடு பாடல் வெளியானது. இறைவனின் ஆசி படத்துக்கு உள்ளதாக நினைக்கிறேன்.
படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது. அதற்கு விஷால் முழு முயற்சி எடுக்கிறார். தூங்கும் போதும் போன் பேசுகிறார். எந்திரிக்கும் போதும் போன் பேசுகிறார். இந்த பாடல் எடுக்கும் போது தொடர்ந்து தடங்கல் வந்தது. பிறகு கடவுளிடம் பூஜை செய்து விட்டு துவங்கலாம்னு விஷால் சொன்னார். அதற்கு பிறகு தான் நல்லா பாடல் எடுக்க முடிந்தது. இந்த பாடலுக்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.