கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் முத்தையா - கார்த்தி கூட்டணி 'விருமன்' எனும் படத்தில் இணைந்துள்ளனர். சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியுடன் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
’கொம்பன்’ படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி (இயக்குநர் சங்கரின் மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் முத்தையா உடன் முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார்.