தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கார்த்தியின் விருமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - கார்த்தி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் விருமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கார்த்தியின் விருமன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : May 18, 2022, 6:52 PM IST

கொம்பன் படத்திற்கு பிறகு மீண்டும் முத்தையா - கார்த்தி கூட்டணி விருமன் படத்தில் இணைந்துள்ளது. சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியுடன் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

கொம்பன் படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி (இயக்குநர் சங்கரின் மகள்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் முத்தையா உடன் முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார்.

‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Perarivalan Release: பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகர் சத்யராஜ்!

ABOUT THE AUTHOR

...view details