இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது என சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீனப்பெண்மணி ஒருவர் அழகிய தமிழில், ஏஆர் ரஹ்மான் இசையில் 'இருவர்' படத்தில் வெளியான நறுமுகையே பாடலை பாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் சங்க இலக்கியத்தின் அகத்தினை குறிக்கின்ற கவிஞர் வைரமுத்து எழுதிய ‘நறுமுகையே’ பாடலைப் பாடுகிறேன், எனக் கூறி அந்தப் பாடலைப் பாடுகிறார். இதனை 'சங்க இலக்கியம்' எனும் தலைப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவி வருகிறது.
'நறுமுகையே' பாடலைப் பாடிய சீனப்பெண் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் இதையும் படிங்க:திருச்சியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்