தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இப்பேர்ப்பட்ட படைப்பில் எங்களை சிறுதுளியாய் சேர்த்த கமல் சாருக்கு நன்றி...!'- வில்லேஜ் குக்கிங் சேனல் குழு - வில்லேஜ் குக்கிங் சேனல்

விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தொடுத்ததற்கு ’வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு’ நன்றி தெரிவித்துள்ளனர்.

’இப்பேற்பட்ட படைப்பில் எங்களை சிறுதுளியாய் சேர்த்த கமல் சார்க்கு நன்றி...!’ - வில்லேஜ் குக்கிங் சேனல் குழு
’இப்பேற்பட்ட படைப்பில் எங்களை சிறுதுளியாய் சேர்த்த கமல் சார்க்கு நன்றி...!’ - வில்லேஜ் குக்கிங் சேனல் குழு

By

Published : Jun 5, 2022, 7:14 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையிலேயே இந்தப்படம் அதிக வசூல் தந்தப் படமாக திகழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இப்படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த புகழ்பெற்ற ‘Village Cooking Channel' குழுவினர் தங்களுக்கு அளித்த வாய்ப்பிற்கு காணொலி ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.

’வில்லேஜ் குக்கிங் சேனல்’, யூ-ட்யூபில் மிகவும் பிரபலமான சமையல் சேனல். இயற்கை காட்சிகள் அடங்க, சமையல் முறையை யதார்த்த முறையில் காட்சிப்படுத்தி எளிய மனிதர்களாக பார்வையாளர்களுக்கு சமைத்து காண்பிப்பதால் இவர்கள் பல லட்சப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளனர்.

'இப்பேர்ப்பட்ட படைப்பில் எங்களை சிறுதுளியாய் சேர்த்த கமல் சாருக்கு நன்றி...!'

இதனையடுத்து, தங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு காணொலி வாயிலில் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், இத்தகைய படைப்பில் தங்களையும் சிறுதுளியாய் இணைத்துக்கொண்ட கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நேரில் பத்திரிகை வைத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

ABOUT THE AUTHOR

...view details