தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெற்றிகரமான 25ஆவது நாளை நோக்கி 'விக்ரம்'! - விக்ரம் வெற்றி

நடிகர் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றிகரமான 25ஆவது நாளை நோக்கி நகர்ந்துவருகிறது. அதனை வரவேற்கும் விதமாக படக்குழு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வெற்றிரமாக 25வது நாளை கடந்த விக்ரம்!
வெற்றிரமாக 25வது நாளை கடந்த விக்ரம்!

By

Published : Jun 23, 2022, 7:57 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 3ஆம் தேதி வெளியான படம் ’விக்ரம்’.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வசூலைக் குவித்துள்ளது. கமல் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

மேலும், இன்று வரை உலகளவில் ரூ.350 கோடியை கடந்து வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் விரைவில் 25ஆவது நாளை எட்டயிருக்கிறது. அதையொட்டி, படக்குழுவின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாளை நான்கு படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும் இப்போது வரை விக்ரமின் ஓட்டம் நிற்கவில்லை. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை தற்போது வரை ’விக்ரம்’ வசப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாடகர் திருமூர்த்தியை அழைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details