நடிகர்கள் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ் ரவிக்குமார், நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெகுநாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ள திரைப்படம் ’கோப்ரா’.
பல்வேறு தடைகளைத் தாண்டி, தற்போது இன்னும் சில நாட்களில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். மிகப்பெரும் செலவில் வெகுநாட்களாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்களில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பே வெளியானநிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் வித்தியாசமான ஓர் கதைக்களத்தை இந்தப்படத்தில் அணுகியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், விக்ரமின் மிரட்டலான ஏழு கெட்டப்கள் சுவாரஸ்யத்தையும், படத்தைக் காண வேண்டும் என்னும் ஆர்வத்தையும் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் பெரும்கொண்டாட்டத்துடன் வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பென்சில் பட இயக்குநர் மாரடைப்பால் காலமானார்...