தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நிறைவடைந்தது ஹிந்தி 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு! - விக்ரம் வேதா ஹிந்தி

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள ’விக்ரம் வேதா’ ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவடைந்தது ‘விக்ரம் வேதா’ ஹிந்தியின் படப்பிடிப்பு..!
நிறைவடைந்தது ‘விக்ரம் வேதா’ ஹிந்தியின் படப்பிடிப்பு..!

By

Published : Jun 10, 2022, 6:17 PM IST

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றது. நடிகர்கள் விஜய்சேதுபதி, மாதவன், மற்றும் படத்தின் சிறு கதாபாத்திரங்கள் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'விக்ரம் வேதா'வை புஷ்கர் - காயத்ரி இயக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன், சையிப் அலி கான் ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தமிழில் இப்படத்தை தயாரித்த 'Y not Studios' திரைப்பட தயாரிப்பு நிறுவனமே இப்படத்தை ஹிந்தியிலும் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தை ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். மாதவன் நடித்த ‘விக்ரம்’ கதாபாத்திரத்தை ஹிந்தியில் நடிகர் சையிப் அலி கான் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: SK-விற்காக பாடிய கின்னஸ் பாடகர்

ABOUT THE AUTHOR

...view details