விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படம் 'கோப்ரா'. இத்திரைப்படத்தை ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் சஸ்பென்ஸ், சைக்காலஜிக்கல் த்ரில்லர் பட பாணியில் உருவாகியுள்ளது. விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளார்.
‘கேஜிஎஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையாததால் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கோப்ரா’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு! - irfan pathan
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் கோப்ரா