தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீபாவளி ரேசில் விக்ரம் பிரபு! 'ரெய்டு' வெற்றி பெறுமா?

raid movie release for diwali: விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகி உள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளி ரேஸில் இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர்
தீபாவளி ரேஸில் இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 8:40 PM IST

சென்னை: ‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்.

சமீப காலமாக வெளியாகி உள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது. இது ’ரெய்டு' படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படமும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரெடியா ? எக்ஸ் தளத்தில் லியோ போஸ்டருடன் பதிவிட்ட த்ரிஷா!

ABOUT THE AUTHOR

...view details