தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’விக்ரம்... விக்ரம்... நான் வெற்றி பெற்றவன்’ - ஜூலை 8 இல் ஒடிடியில் வெளியாகிறது விக்ரம்’ - surya

விக்ரம் திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஹாட்ஸ்டார்' ஒடிடி தளத்தில்  ஜூலை 8ஆம் தேதி வெளியாகும் ’விக்ரம்’
'ஹாட்ஸ்டார்' ஒடிடி தளத்தில் ஜூலை 8ஆம் தேதி வெளியாகும் ’விக்ரம்’

By

Published : Jun 29, 2022, 1:07 PM IST

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி, என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்துடன் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைத்தது.

இத்திரைப்படத்தின் சாட்டிலைட், ஓடிடி வெளியிட்டு உரிமையை ஸ்டார் நெட்வோர்க் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்நிலையில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி ’ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ரோலக்ஸ்’க்கு அழைப்பு விடுத்த ஆஸ்கார்ஸ்!!… ரசிகர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details