தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'விக்ரம்' படத்திற்கு புதிய விளம்பர யுக்தி: பான் இந்தியா பட ஆசையில் கமல்..? - லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தை விளம்பரப்படுத்த புதிய முயற்சியை அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார்.

விக்ரம் படத்திற்கு புதிய விளம்பர யுக்தி: பான் இந்தியா பட ஆசையில் கமல்..?
விக்ரம் படத்திற்கு புதிய விளம்பர யுக்தி: பான் இந்தியா பட ஆசையில் கமல்..?

By

Published : Apr 19, 2022, 5:53 PM IST

விக்ரம் படத்தை பான் இந்தியா படமாக்க கமல் முயற்சி செய்து வருவதால், இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் படுபயங்கரமாக உள்ளன. தமிழில் இருந்து பான் இந்தியா படங்கள் ஏதும் பெயர் சொல்லும் அளவிற்கு வெளியாகவில்லை. ஆனால் 'கேஜிஎப் 2', 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்கள் பான் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலும் வசூல் சாதனை நடத்தி வருகின்றன.

விக்ரம் படத்திற்கு புதிய விளம்பர யுக்தி: பான் இந்தியா பட ஆசையில் கமல்..?

எனவே, கமல் புரொடக்‌ஷனில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தை பல மொழி ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக மாற்ற கமல் அதிக முனைப்பு காண்பித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையொட்டி இப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, துபாயில் நடத்த திட்டமிட்டு வருகிறார்களாம். மே முதல் வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு, கமல் உலகின் பல நாடுகளுக்கும் சென்று 'விக்ரம்' படத்தை விளம்பரம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக ரயில் இன்ஜினில் படத்தின் போஸ்டர்களைப் பயன்படுத்தி உள்ளனர். இதற்காக ’வேப் 07 லோகோ இன்ஜினில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும்’ என்று தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'Thalaivar 169' நெல்சன் இயக்குவது உறுதி..? : மௌனம் கலைத்த நெல்சன்

ABOUT THE AUTHOR

...view details