லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8 அன்று பிரத்யேகமாக வெளியானது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான “விக்ரம்” தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.