நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’ எனும் வசனமில்லா மௌனப் படம் உருவாகிறது. டார்க் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமையில் உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் எனத் தெரிகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காந்தி டாக்ஸ் மௌனப் படம் - காந்தி டாக்ஸ்
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மௌனப் படமான ’காந்தி டாக்ஸ்’ உருவாகிவருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ் மௌனப் படம்!
இப்படத்தை இயக்குநர் கிஷோர் P பெலேகர் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட” என்றார்.
இதையும் படிங்க: ’மஞ்சு வாரியர் ஏன் அமைதி காக்கிறார்..?’ - இயக்குநர் சனல்குமார் சசிதரன் கேள்வி