தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இயக்குநர்கள் தலையில் இடியை இறக்கும் விஜய் சேதுபதி! - விஜய்சேதுபதி

தமிழ்சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் இடி விழும் அளவுக்கு ஒரு கண்டிஷன் போட்டு வருகிறாராம். அது என்னதெரியுமா?

இயக்குநர்கள் தலையில் இடியை இறக்கும் விஜய் சேதுபதி!
இயக்குநர்கள் தலையில் இடியை இறக்கும் விஜய் சேதுபதி!

By

Published : Jun 17, 2022, 4:20 PM IST

தமிழ் சினிமா ஹீரோக்களில் இப்பொழுது ரொம்ப பிஸியாக இருப்பது, விஜய்சேதுபதி தான். தன் வசம் வரும் வாய்ப்புகளை விஜய்சேதுபதி மறுக்காமல் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அதனால், சமீபத்தில் எல்லா படங்களிலும் அவர் தான் இருக்கிறார். அதிலும் ஆண்டிற்கு ஏழெட்டுப் படங்களை அசால்ட்டாக நடித்து ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்.

எந்த கேரக்டர் என்றாலும் அசால்ட்டாக கால்சீட் கொடுத்து வருபவர். இப்பொழுது ஒரு முக்கியமான கண்டிஷன் போடுகிறாராம். தன்னைத் தேடி வரும் இயக்குநர்கள் அனைவரிடமும் தலையில் இடி விழும் அளவுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். நீங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என்று குண்டை தூக்கி போடுகிறார் என்கின்றனர்.

ஒப்புக்கொண்ட படங்களை எல்லாம் முடித்துக் கொடுக்கும் எண்ணத்தில் இப்படி ஒரு கண்டிஷனை போட்டிருக்கலாம் என்கின்றனர். இருந்தாலும் இயக்குநர்களின் பார்வையில், ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதற்கு மட்டுமே இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
அப்படி இருக்கும்போது, இவருக்காக மட்டும் மூன்று ஆண்டுகள் எப்படி காத்திருப்பது என இயக்குநர்கள் எல்லோரும் தெறித்து ஓடுவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: திரையுலக பிரபலங்கள் பாராட்டில் 'சுழல் தி வோர்டெக்ஸ் '!

ABOUT THE AUTHOR

...view details