சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜின் எல்சியு யுனிவர்சில் லியோ இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. விக்ரம் திரைப்பட வசூலை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி லியோ பட வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி, சேட்டிலைட், வெளிநாட்டு உரிமம் என இதுவரை ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், எப்படியும் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதியில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.