சமந்தா நடிப்பில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய 'தி ஃபேமிலிமேன்’ வெப்தொடரை இயக்கிய ராஜ் & டிகே இயக்கத்தில் புதிய தொடர் ஒன்று உருவாகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஃபேமிலிமேன் தொடரில் நடிக்க வேண்டியது. ஆனால் பல்வேறு எதிர்ப்பு காரணமாக அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் இந்தப் புதிய வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு ‘ஃபர்ஜி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் காவல் துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.