தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - nayanthara

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிவரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

By

Published : Jul 6, 2022, 9:43 AM IST

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிவரும் திரைப்படம் ’ஜவான்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கெளரிகான் தயாரிப்பில், இந்தப் புதிய படத்தை ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்த படம் அடுத்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு கடந்த மாதம் டைட்டில் வீடியோ மூலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லனாக நடிப்பதற்கு முதலில் படக்குழு, நடிகர் ராணாவை அணுகியதாகவும் அவர் வேறு படத்தில் நடிப்பதால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பை ஷாருக்கான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே புஷ்பா 2ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் தற்போது ஷாருக்கான் படத்திலும் அவர் நடிக்கப்போவதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: letterboxd இணையதள தரவரிசை பட்டியல் - இரண்டாம் இடம் பிடித்த ’கடைசி விவசாயி’ திரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details