தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2022, 3:06 PM IST

ETV Bharat / entertainment

“தி ஆர்டிஸ்ட்” என்னும் தலைப்பில் விஜய் சேதுபதியின் காலண்டர் போட்டோ ஷூட்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் உடன் விஜய் சேதுபதியின் காலண்டர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

விஜய் சேதுபதியின் கேலண்டர் போட்டோ ஷூட்
விஜய் சேதுபதியின் கேலண்டர் போட்டோ ஷூட்

சென்னை: புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதன்படி ஒரு புகைப்படத் தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமச்சந்திரன், இந்த ஆண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, 2023ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.

ஓவியர், சிற்பி, கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட் எனப் பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார், புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன். இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்து 12 கண்கவர் செட்டுகள், ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை “தி ஆர்டிஸ்ட்” காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வானது ஆர்.ஆர்.ஆர்!

ABOUT THE AUTHOR

...view details