சென்னை: பாலிவுட்டில் அந்தாதூன், பத்லாபூர், ஜானி கதார் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வெளியான உடனே, ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி, 'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் (Mumbaikar), ஃபார்ஸி இணையத் தொடர், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மெரி கிறிஸ்துமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க:ரீ ரிலீஸ் செய்யப்படும் கமல்ஹாசனின் ஆளவந்தான்!
தற்போது, மீண்டும் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக சினிமா வர்த்தகர் தரண் ஆதர்ஷ் தனது X சமூக வலைத்தள பக்கத்தில், படத்தின் புதிய போஸ்டர்களுடன், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, 'மெரி கிறிஸ்துமஸ்' படம், டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் இருக்கும் ரன்பீர் கபூர் நடித்துள்ள 'அனிமல்' மற்றும் விக்கி கௌஷல் நடித்துள்ள 'சாம் பகதூர்' ஆகிய திரைப்படங்களுக்குப் போட்டியாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில், அடுத்தடுத்த பெரிய படங்கள் வெளியாக உள்ளதால் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் நடித்துள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில், ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு படமெடுக்கப் போகும் கௌதம் மேனன்..!