ஹைதராபாத்: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான லியோவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் தலகோனா மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு நடிகர் விஜயை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தின் ஊச்சிக்கு சென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் கூச்சலிட்டனர். இவர்களைப் பார்த்த நடிகர் விஜய் ஷூட்டில் செட்டிற்கு போவதற்கு முன்பு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய் என முழக்கங்களை எழுப்பி கடவுளைப் பார்த்த பக்தர்கள் போல் பிரமித்துப் போயினர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் நடிகர் விஜய் "நா ரெடி" பாடலில் அணிந்திருந்த ஆடையை அணிந்துள்ளார். அந்த பாடலின் தொடர்ச்சியான படக் காட்சிகள் தான் அங்கு ஷூட் செய்யப்படுகிறதோ என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:விஜய்யுடன் இணைகிறாரா வெற்றிமாறன்? இயக்குநர் வெற்றிமாறன் கூறுவது என்ன?
"நா ரெடி" பாடல் வெளியாகி யூடியூபில் 31 மில்லியணுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே கூறலாம். இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசால் கோலார் ஆகியோர் பாடியுள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் சஞ்சய் தத் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பலர் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டேவிட் க்ரோனெர்ன் பெர்க்கின் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (David Cronernberg's A History of Violence) ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள லியோ திரைப்படம், முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் பற்றிய கதை என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீது பல்வேறு சர்ச்சை குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் லியோ படத்தில் போதைப்பொருள் மற்றும் புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் தோரணையில் நடித்திருப்பதாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்..! விஜய்க்கு சமூக ஆர்வலர் நோட்டீஸ்!