மயிலாடுதுறை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. அந்த நாளில் நடிகர் அஜீத்தின் துணிவு படமும் வெளியாகிறது. இதனால் இருவரது ரசிகர்களும் கொண்டாட்டமாக உள்ளனர். இதனிடையே விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் 108 தோப்புக்கரணம் போட்டு படம் வெற்றியடைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர்.
வாரிசு படம் வெற்றி அடைய 108 தோப்புக்கரணம் போட்ட விஜய் ரசிகர்கள் - varisu movie released
மயிலாடுதுறையில் நடிகர் விஜயின் வாரிசு படம் வெற்றி அடைய 108 தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் வேண்டுதல் வைத்தனர்.
Etv Bharatவாரிசு படம் வெற்றியடைய 108 தோப்புக் கரணம் போட்டு ரசிகர்கள் வேண்டுதல்
இந்த வேண்டுதல் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் குட்டி கோபி தலைமையில் நடந்தது. அதேபோல படம் வெற்றியடைய மயூரநாதர் அபயாம்பிகை, அம்பாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறை விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்ணாமலையின் பேச்சு சரியில்லை: பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் கண்டனம்!
Last Updated : Jan 8, 2023, 10:50 AM IST