தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் ஆண்டனி படத்தில் ஜி பி முத்து - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - d imman

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் வள்ளிமயில் 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது

விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு
விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

By

Published : Jun 15, 2022, 1:35 PM IST

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது, இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என கூறினார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிகொள்கிறேன் என்று பேசினார்.

விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

"வள்ளிமயில்" படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார், விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக ஆண்டனி பணியாற்றுகிறார் மேலும் இப்படத்தில் அறந்தாங்கி நிஷா, புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: வசூல் சாதனை புரிந்த ”சிவாஜி” திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details