தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 அப்டேட்! - kollywood news

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் கொண்ட 'ஸ்னீக் பீக் டிரெய்லர்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’பணம் உலகை காலி பண்ணிடும்’... நாளை வெளியாகும் பிச்சைக்காரன் 2 அப்டேட்
’பணம் உலகை காலி பண்ணிடும்’... நாளை வெளியாகும் பிச்சைக்காரன் 2 அப்டேட்

By

Published : Feb 10, 2023, 10:20 AM IST

Updated : Feb 10, 2023, 11:54 AM IST

இசை அமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. கடந்த 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல், கடந்தாண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'கோடியில் ஒருவன்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் ஆண்டனிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் உள்ளது. அவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார். பின்னர் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சென்னை அழைத்துவரப்பட்டு வாயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் பிச்சைக்காரன் 2 படத்தின் வேலைகளை மேற்கொண்டு வருவதாகவும் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்த விஜய் ஆண்டனி, ’பணம் உடலுக்கு கேடு’ என்றும் ’பணம் உலகை காலி செய்துவிடும்’ என்றும் பதிவிட்டுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் கொண்ட ‘ஸ்னீக் பீக் டிரெய்லர்’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: உலகளவில் நெட்பிளிக்ஸில் முதலிடம் பிடித்த அஜித்தின் துணிவு!

Last Updated : Feb 10, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details