தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படப்பிடிப்பில் படகு விபத்து.. நடிகர் விஜய் ஆண்டனி காயம்.. - பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து

மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.

விஜய் ஆண்டனி காயம்
விஜய் ஆண்டனி காயம்

By

Published : Jan 17, 2023, 6:42 AM IST

சென்னை:சசி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கலக்கிய இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார். இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக வளம் வருகிறார். ‘நான்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக அவர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இவரது பாடலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே போல் இவரது அமைதியான நடிப்பும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இவரது பாடலுக்கு மட்டுமல்லாமல், நடிப்பிற்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர் தற்போது தற்போது வள்ளிமயில் , தமிழரசன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிபு மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனி தான் இயக்குகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரேக்ளா ரேஸ்: மாட்டு வண்டி பந்தயத்தில் இரு பார்வையாளர்கள் மாடு முட்டி பலி!

ABOUT THE AUTHOR

...view details