தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Pichaikkaran 2: பல தடைகளை தாண்டி வெளியானது 'பிச்சைக்காரன் 2' ட்ரைலர்! - சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 (Pichaikkaran - 2) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pichaikkaran 2
பிச்சைக்காரன் 2

By

Published : Apr 29, 2023, 3:43 PM IST

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், கொலை, ரத்தம், வள்ளி மயில் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த வாரம் 'தமிழரசன்' என்ற படம் வெளியானது. ஆனால் இப்படம் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது.

கடந்த 2016 ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன் தனது அம்மாவுக்காக பிச்சைக்காரன் ஆகிறான் என்ற கதைக்களத்தை கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமின்றி இப்படம் தெலுங்கிலும் வெளியாகி அங்கேயும் வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகம் (Pichaikkaran - 2) எடுக்க அந்த படக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த முறை படத்தை சசி இயக்கவில்லை. விஜய் ஆண்டனியே 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் அதாவது மே 19 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின்‌ படப்பிடிப்பு லங்காவி தீவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தாடையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் உடல் நலம் தேறிய அவர் 'பிச்சைக்காரன் 2' படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று‌ இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முதல் பாகத்தில் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படத்தில் ஆன்டி பிகிலி என்ற பெயர் ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏழைகளை ஏமாற்றி பிழைக்கும் நபர்களுக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பிகிலி என்று விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருந்தார். இதுவும் தற்போது இப்படத்தின்‌ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: வாங்காத பொருட்களுக்கு பில்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details