தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’..! - விஜய் ஆண்டனி

சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’..!
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’..!

By

Published : May 7, 2022, 6:23 AM IST

சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார். மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மே16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி கொடைக்கானல்,தேனி,காரைக்குடி,கோபிசெட்டிபாளையம்,பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க: ஜானி டெப் - அம்பேர் ஹெர்ட் வழக்கு விசாரணை!- நீதிமன்றத்தில் கதறி அழுத அம்பேர் ஹெர்ட்!

ABOUT THE AUTHOR

...view details