சென்னை: Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது. விஜய் ஆண்டனி நடிக்கும் "ரத்தம்" படத்தின் பரபரப்பான இரண்டாவது லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்தப் புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இயக்குநர் CS.அமுதன் கூறுகையில், ' ‘ரத்தம்’ படம் இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத கதையை விவரிக்கும் ஒரு க்ரைம் டிராமா. இத்திரைப்படம் நாம் தினமும் பார்க்கும் ஒன்றைத் தான் முன்வைக்கிறது, ஆனால் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் ஒரு போதும் உணரவில்லை என்பதே உண்மை’ என்றார்.