தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விரைவில் நல்ல செய்தி: விஜய் - அஜித் கூட்டணி? - venkat prabu

விஜய், அஜித் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

விஜய் - அஜித் கூட்டணி விரைவில் நல்ல செய்தி
விஜய் - அஜித் கூட்டணி விரைவில் நல்ல செய்தி

By

Published : Jun 20, 2022, 11:06 PM IST

தமிழ்த் திரையுலகின் இரண்டு மிகப்பெரும் நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரை ஒன்றாக வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரையும் வைத்து படம் எடுக்கவுள்ளார் என அவரது தந்தை கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் அவரிடம் தெலுங்கில் இரண்டு பெரும் நடிகர்களை வைத்து ஆர்ஆர்ஆர் படம் போன்று தமிழில் விஜய், அஜித் அவர்களை வைத்து இயக்க உங்கள் மகனால் தான் முடியும் எனக் கேட்ட போது அவர், 'எனது மகன் வெங்கட் பிரபு கதையை ரெடி பண்ணிவிட்டார். விஜயும், அஜித்தும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் நல்ல செய்தி வரும். நாங்களே அறிவிக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

இது சற்று நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், 'இதை எப்பொழுது நான் கூறினேன்' என்பது போன்ற gif ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தையின் பேச்சுக்கு வெங்கட் பிரபுவின் நகைச்சுவையான இந்தப் பதிலை நெட்டிசன்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பீஸ்ட்டை கலாய்த்த மலையாள நடிகர்!

ABOUT THE AUTHOR

...view details