தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விக்னேஷ் சிவனுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி? - சென்னை செய்திகள்

நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ளார்.

'விஜய் சேதுபதி உடன் வேகமெடுக்கும் விக்னேஷ் சிவன்'
'விஜய் சேதுபதி உடன் வேகமெடுக்கும் விக்னேஷ் சிவன்'

By

Published : Feb 26, 2023, 7:35 AM IST

சென்னை:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ''போடாபோடி'' படத்தின்‌ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். சிம்பு நடித்த அப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர்.

இதன்பின்பு நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலிக்கத் தொடங்கினர். இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமானார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், கதை எழுத விக்னேஷ் சிவன் தாமதப்படுத்தியதால் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலிம், அஜித்தை வைத்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார் எனும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் மனவேதனையில் இருக்கும் விக்னேஷ் சிவன் தனது ஆஸ்தான நடிகரான விஜய் சேதுபதியை நாடினார்.

தற்போது விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு புறம் லவ் டுடே படத்தின் இயக்குநர் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்துதான் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற தகவலும் உலா வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதில் எது உண்மை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே தெரியவரும்.

இதையும் படிங்க:Happy Birthday GVM: எவர்கிரீன் சினிமா காதலன் கௌதம் மேனன்.. ஒரு பார்வை..

ABOUT THE AUTHOR

...view details