சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரது நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கினார். இதனையடுத்து விக்னேஷ் சிவன் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.
லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை மாஸ்டர், லியோ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்ஜே சூர்யா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மிஷ்கின், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்றைய இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில், ரொமான்ஸ் காமெடிப் படமாக இப்படம் உருவாகிறது. கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராகவும், பிரவீன் ரஜா உடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.
இதையும் படிங்க:நடிகர் பிரபுவின் மகளை கரம் பிடித்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.. நடிகர் விஷால் நேரில் வாழ்த்து!