சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர், இயக்குநர் அட்லி. அடுத்தடுத்து தொடர் பிளாக் பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றவர், அட்லி. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி, அதன்பின் தெறி, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து நான்கு பிளாக் பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குநர் வரிசையில் இணைந்தார்.
இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் "ஜவான் " திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து இயக்குவது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
இயக்குநர் அட்லி, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் பிரியாவின் வளைகாப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பரிசுடன் சென்று, இருவரையும் வாழ்த்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் அட்லி, ஜவான் படத்தை அடுத்து விஜய்யை இயக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இருவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது அந்த தகவலை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க:சசிகுமாரின் “காரி” ஓடிடி தேதி வெளியீடு!